Arumai Ratchaka Koodi Vanthom

அருமை ரட்சகா கூடிவந்தோம்

அருமை ரட்சகா, கூடிவந்தோம்;-உம
தன்பின் விருந்தருந்த வந்தோம்.

அறிவுக் கெட்டாத ஆச்சரியமான
அன்பை நினைக்க – அருமை

ஆராயும் எமதுள்ளங்களை,-பல
வாறான நோக்கம் எண்ணங்களைச்
சீராய்ச் சுத்தமனதாய் உட்கொள்ள நீர்
திருவருள் கூரும். – அருமை

ஜீவ அப்பமும் பானமும் நீர்,-எங்கள்
தேவையாவும் திருப்தி செய்வீர்;
கோவே! மா பயபக்தியாய் விருந்து
கொண்டாட இப்போ. – அருமை

உமதன்பின் பிரசன்னம் பெற்றோம்;-உம-து
ஒளி முகதரிசன முற்றோம்;
சமாதானம், அன்பு சந்தோஷமும் எமில்
தங்கச் செய்திடும். – அருமை

கிருபை விருந்தின் இந்த ஐக்யம்-பூவில்
கிடைத் தற்கரிய பெரும் பாக்கியம்;
அரும் பிரியத்தோ டெங்களை நேசிக்கும்
குருவே, வந்தனம்! – அருமை

எங்கட்காய் உமை ஒப்புவித்தீர்;-கொடும்
ஈனச் சிலுவையில் மரித்தீர்;
பொங்கும் பேரன்பை எங்கும் தெரிவிப்போம்,
புண்ணிய நாதரே! – அருமை

பந்திக் கெசமான் நீர் யேசுவே!-எமைச்
சொந்தமாய் வரவழைத்தீரே;
உந்தம் கிருபை வல்லமை பெற்றுமக்
கூழியஞ் செய்ய. – அருமை

Arumai Ratchaka Koodi Vanthom Lyrics

Arumai Ratchakaa, Kootivanthom; Uma
Thanpin Viruntharuntha Vanthom.

Arivuk Kettatha Aachchariyamaana
Anpai Ninaikka – Arumai

Aaraayum Emathullangalai, Pala
Vaaraana Nnokkam Ennnangalaich
Seeraaych Suththamanathaay Utkolla Neer
Thiruvarul Koorum. – Arumai

Jeeva Appamum Paanamum Neer, Engal
Thaevaiyaavum Thirupthi Seyveer;
Kovae! Maa Payapakthiyaay Virunthu
Konndaada Ippo. – Arumai

Umathanpin Pirasannam Pettaom; Uma Thu
Oli Mukatharisana Muttaom;
Samaathaanam, Anpu Santhoshamum Emil
Thangach Seythidum. – Arumai

Kirupai Virunthin Intha Aikyam Poovil
Kitaith Tharkariya Perum Paakkiyam;
Arum Piriyaththo Dengalai Naesikkum
Kuruvae, Vanthanam! – Arumai

Engatkaay Umai Oppuviththeer; Kodum
Eenach Siluvaiyil Mariththeer;
Pongum Paeranpai Engum Therivippom,
Punnnniya Naatharae! – Arumai

Panthik Kesamaan Neer Yaesuvae! Emaich
Sonthamaay Varavalaiththeerae;
Untham Kirupai Vallamai Pettumak
Kooliyanj Seyya. – Arumai

You Might Also Like